சம்பல் | Sambal
தேவையான பொருட்கள்:
தேங்காய்த்துறுவல் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
சின்ன வெங்காயம் -6
கறிவேப்பிலை - 1 கொத்து
சீரகம்+எண்ணெய் - தலா 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*காய்ந்த மிளகாயை எண்ணெயில் கருகாமல் வறுத்தெடுக்கவும்.
*சிறிய இடிப்பானில் காய்ந்த மிளகாயுடன் உப்பு சேர்த்து இடிக்கவும்பின் சீரகம், சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து இடிக்கவும்.
*கடைசியாக தேங்காய்த்துறுவல் சேர்த்து இடிக்கவும்.தண்ணீர் சேர்க்ககூடாது.
பின் குறிப்பு:
*கறிவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயம் சேர்ப்பதுதான் சுவை தரும்.
*துவையல் போல் அரைக்கவேண்டுமெனில் மிக்ஸியில் தேங்காய்துறுவல்+பச்சை மிளகாய், உப்பு, புளி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கடைசியாக சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.