கறுப்புக் கடலை மோர்க்குழம்பு | Kale Chane Ki Kadhi
தேவையான பொருட்கள்:
கறுப்புக்கடலை -1/4 கப்
தயிர் -1/2 கப்
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது
உப்பு -தேவைக்கு
தாளிக்க:
கடுகு -1/4 டீஸ்பூன்
சீரகம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
பெருங்காயத்தூள் + வரமிளகாய்த்தூள் -தலா 1/4 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் -2
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைத்தெடுக்கவும்.
*மிக்ஸியில் தயிர், உப்பு, மஞ்சள்தூள் மற்றும் கடலை மாவு சேர்த்து நன்கு அடிக்கவும்.
*பாத்திரத்தில் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வேகவைத்த கடலை+ தயிர் கலவையை ஊற்றி கொதிக்கவிடவும்.
*இடையிடையே கலக்கி 5-10 நிமிடங்கள் கொதிக்கவைத்து கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்