பட்டர் பனீர் மசாலா
தேவையான பொருட்கள்:
பனீர் -250 கிராம்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
காஷ்மிரி மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் -1 டீஸ்பூன்
பால் - 1/4 கப்
கசூரி மேத்தி - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் -தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*பனீரை சிறிது எண்ணெயில் வறுத்து உப்பு கலந்த நீரில் 10 நிமிடம் போட்டு நீரை வடிகட்டவும்.
*வெங்காயத்தை முழுதாக தோலுரித்து நான்காக கீறி உப்பு கலந்த கொதிக்கும் நீரில் 5 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து அரைக்கவும்.
*தக்காளியையும் கொதிக்கும் நீரில் போட்டு தோலுரித்து அரைக்கவும்.
*பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு வெங்காய விழுது, இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி விழுது என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
*தேவையானளவு நீர் மற்றும் பால் சேர்த்து கொதிக்க வைத்த பின் பனீர் துண்டுகளை சேர்த்து 5நிமிடம் கழித்து இறக்கவும்.
பின் குறிப்பு:
*வெங்காயத்தை வேகவைத்து அரைப்பதால் க்ரேவி கெட்டியாக நன்றாக இருக்கும்