சரவணபவன் ஹோட்டல் டிபன் சாம்பார் | saravana bhavan hotel tiffin sambar

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு - 2/3 கப்

மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்

வெங்காயம் - 1

தக்காளி - 2

கீறிய பச்சை மிளகாய் -2

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

அரைக்க

தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்

பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்

தக்காளி - 1

சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்

பெருங்காயப்பொடி -1/4 டீஸ்பூன்

தாளிக்க

கடுகு+ உளுத்தம்பருப்பு+சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்

நெய் - 2 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

காய்ந்த மிளகாய் - 1

செய்முறை விளக்கம்:

*துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*வெங்காயம் மற்றும் தக்காளி பொடியாக நறுக்கவும்.அரைகக் கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தில் பாதி, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

*பின் அரைத்த விழுது , உப்பு மற்றும் 1/2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி சேர்க்கவும்

*இந்த சாம்பார் இட்லி,தோசை,சப்பாத்தி,வெண்பொங்கல்,ஊத்தாப்பம் என  அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.

பின் குறிப்பு:

*சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

*சாம்பார் இன்னும் வாசனையாக இருக்க தாளிப்பில் சீரகத்தை மறக்காமல் சேர்க்கவும்.  நான் சேர்க்க மறந்துவிட்டேன்.

*2/3 கப் = 10 டேபிள்ஸ்பூன்மற்றும்   2 டீஸ்பூன்

*இதில் விரும்பி்னால் முருங்கைக்காய்,கத்திரிக்காய் சேர்த்து செய்யலாம்

Related Videos