சிவகாசி சிக்கன் பிரியாணி | Sivakasi Chicken Biryani

இந்த பிரியாணியில் தயிர் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்க கூடாது.காரத்திற்கு வரமிளகாய்த்தூள் மட்டுமே சேர்க்கவேண்டும்.அதுவே பிரியாணிக்கு தனி கலர் கொடுக்கும்.

மற்றும் இஞ்சி பூண்டினை ஹோல் கரம் மசாலா தாளித்த பின் வதக்க வேண்டும்.பட்டை,கிராம்பு,ஏலக்காய்,சோம்பு ,கசகசா இவற்றை வறுத்து பொடித்து சேர்க்கவேண்டும்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் -1/2 கிலோ

பாஸ்மதி -3 கப்

தேங்காய்ப்பால் -1 1/2 கப்

நறுக்கிய வெங்காயம் -1 பெரியது

நறுக்கிய தக்காளி -1 பெரியது

இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்

வரமிளகாய்த்தூள் - 2 1/2 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சை சாறு -2 டீஸ்பூன்

புதினா,கொத்தமல்லி -தலா 1/4 கப்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

வறுத்து பொடிக்க:

பட்டை -1 சிறுதுண்டு

கிராம்பு -3

ஏலக்காய் - 2

சோம்பு - 1 டீஸ்பூன்

கசகசா - 1/2 டீஸ்பூன்

தாளிக்க

பிரிஞ்சி இலை -2

கிராம்பு -2

ஏலக்காய் -1

சோம்பு - 1/2 டீஸ்பூன்

பட்டை -சிறுதுண்டு

செய்முறை விளக்கம்:

*அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும்.பொடிக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை  சேர்த்து தாளித்து இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்

*பின் வெங்காயம், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்

*மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கியதும்,சிக்கனை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்

*பின் வறுத்து பொடித்த பொடியை சேர்த்து நன்கு கிளறவும்

*பின் தேங்காய்ப்பால் மற்றும்  1 1/2 கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும்

*நீர் கொதித்ததும் புதினா கொத்தமல்லி, அரிசி மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்

*தண்ணீர் சுண்டி வரும் போது தோசை கல்லை வைத்து அதன் மீது பாத்திரத்தை வைத்து மூடி 20 நிமிடங்கள் சிறுதீயில் தம்மில் போடவும்

*சாதம் வெந்ததும் உடையாமல் கிளறி வறுவல் மற்றும் பச்சடியுடன் பரிமாறவும்

Related Videos