சுவையான பஞ்சாபி சமோசா செய்வது எப்படி??

தேவையான பொருட்கள்:

மேல் மாவுக்கு

மைதா மாவு -2 1/2 கப்

ஓமம்- 1 டீஸ்பூன்

உப்பு -1 டீஸ்பூன்

நெய் -4 டேபிள்ஸ்பூன்

*பாத்திரத்தில் மைதா+உப்பு+ஓமம்+நெய் சேர்த்து கலக்கவும்.பின் நீர் சேர்த்து கெட்டியாக சப்பாத்தி மாவு போல பிசையவும்

பிசைந்த மாவினை ஈரத்துணியால் மூடி குறைந்தது 2 அல்லது 3 மணிநேரங்கள் ஊறவிடவும்.

காரமான மல்டிக்ரெயின் சுண்டல் செய்முறை??

சுவையான பஞ்சாபி சமோசா செய்முறை:

வேகவைத்து மசித்த உருளை -5 நடுத்தரளவு

ப்ரோசன் பச்சை பட்டாணி -1 கப்

ஆம்சூர் பவுடர் -1 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா+வரமிளகாய்த்தூள்+தனியாத்தூள் -தலா 1 டீஸ்பூன்

தனியா -1 டேபிள்ஸ்பூன்

காய்ந்த மாதுளை விதை -1 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய இஞ்சி- 1 டீஸ்பூன்

சீரகம்- 1 டீஸ்பூன்

உப்பு- தேவைக்கு

நெய் -2 டேபிள்ஸ்பூன்

*கடாயில் நெய் விட்டு சீரகம் சேர்த்து தாளித்து நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.

*பின் ஒன்றிரண்டாக மசித்த உருளை மற்றும் தூள் வகைகள்+உப்பு சேர்த்து வதக்கவும்

*வேறொரு கடாயில் தனியா மற்றும் காய்ந்த மாதுளை விதையை வருத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்.

*பொடித்த தனியா பொடியை உருளை மசாலாவில் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி பட்டாணியை சேர்க்கவும்

*2 நிமிடங்கள் வதக்கி ஸ்டப்பிங் கலவையை ஆறவைக்கவும்.

*மைதா மாவினை சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி போல தேய்க்கவும்.

*அதனை நடுவில் கத்தியால் கீறவும்.

*வெட்டிய நீள பகுதியில் நீர் தடவி அதனை அப்படியே 2 முனைகளையும் நடுவில் சேர்த்தால் நீர் தடவிய பகுதி ஒட்டிக்கொள்ளும்.

*அப்படியே கையில் எடுத்து சிறிது ஸ்டப்பிங் கலவையை நன்கு  அழுத்தி வைக்கவும்

*மேற்புறம் சுற்றிலும் சிறிது நீர் தடவி அப்படியே ஒட்டி விடவும்.

*இப்படியே அனைத்து உருண்டையிலும் செய்து சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

*பார்ட்டிகளில் இந்த சமோசாவை செய்து அசத்தலாம்.

பின்குறிப்பு:

*மேல் மாவு தளர்த்தியாக இருந்தால் சமோசா மொறுமொறுப்பாக இருக்காது.அதனால் மாவினை கெட்டியாக பிசையவும்.

*எவ்வளவு நேரம் மாவினை ஊறவைக்கிறோமோ அவ்வளவுக்கும் சமோசா நன்றாக இருக்கும்.

*அனைத்து சமோசவையும் செய்து முடிக்கும் வரை காய்ந்து போகாமல் பேரால் மூடி வைக்கவும்.

*ஸ்டப்பிங் செய்ய மிக முக்கியமானது பூசணி மற்றும் வெள்ளரி விதைகள் தான்.என்னிடம் இல்லாததால் சேர்க்கவில்லை.

*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Tasty Punjabi Samosa Receipe in Tamil | Sweet Punjabi Samosa in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos