பேக்ட் பாகற்காய் பகோடா
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 1/4 கிலோ
கடலைமாவு - 3 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
ஆம்சூர் பவுடர் - 1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*பாகற்காயை வட்டமாக மெலிதாக நறுக்கி உப்பு சேர்த்து பிசிறி 15 நிமிடங்கள் வைத்து கழுவி நீரில்லாமல் வடிகட்டவும்.
*இப்படி செய்வதால் கசப்புதன்மை குறையும்.
*மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து 10 நிமிடம் வைக்கவும்
*அவன் டிரேயில் அலுமினியம் பாயில் போட்டு எண்ணெய் தடவி பாகற்காய்களை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் அடுக்கவும்.
*அவனை 210°C முற்சூடு செய்து 20-25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.10 நிமிடத்திற்கு ஒருமுறை திருப்பிவிடவும்.