குண்டு குண்டு இனிப்பு பூந்தி செய்வது எப்படி??
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
சமையல் சோடா - 1 சிட்டிகை
நெய் - 3 டீஸ்பூன்
முந்திரி,திராட்சை,டைமண்ட் கல்கண்டு - தேவைக்கு
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க
குண்டு குண்டு இனிப்பு பூந்தி செய்முறை:
*கடலை மாவு மற்றும் சமையல் சோடா இரண்டையும் கலந்து சலிக்கவும்.
*அதனுடன் மஞ்சள் கலர் கலந்து தோசை மாவு பதத்திற்க்கு நீர் சேர்த்து கலக்கவும்.கண் கரண்டியில் ஊற்றினால் மாவு விழணும் அதுதான் சரியான பதம்.
*எல்லா மாவையும் கண்கரண்டியில் தோய்த்து பூந்திகளாக பொரித்து வைக்கவும்.
*முந்திரி,திராட்சையை நெய்யில் வறுக்கவும்.
மரவள்ளிக்கிழங்கு இனிப்பு புட்டு செய்வது எப்படி!!!!
*ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு 3/4 கப் நீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.2 விரல்களால் தொட்டால் பிசுபிசுப்பாக இருக்கனும்.அதுதான் பூந்திக்கு சரியான பதம்.
*அடுப்பை நிறுத்திவிட்டு பூந்தி, ஏலக்காய் பொடி,கல்கண்டு, முந்திரி திராட்சை மற்றும் மீதமிருக்கும் நெய் போன்றவற்றை சர்க்கரை பாகில் கலந்து மூடி வைக்கவும்.
*சிறிது நேரம் கழித்து பார்த்தால் பூந்தி பொலபொலவென இருக்கும்.
பின் குறிப்பு:
*இது நான் லட்டுக்காக செய்த குறிப்பு.சர்க்கரை பாகு ஆறிவிட்டதால் லட்டு பிடிக்க வரவில்லை.இளஞ்சூடாக இருக்கும் போதே நெய் தொட்டு லட்டுகளாக பிடிக்கவும்.
*கரைத்த கடலைமாவில் 3 பங்காக பிரித்து சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் கலர் சேர்த்து கலர் பூந்தி செய்யலாம்.பார்ப்பதற்க்கு அழகாக இருக்கும்.
*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Sweet Poonthi Receipe in Tamil | Taste & Spicy Poonthi Receipe in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil