பருப்பு ரசம் | Tuvar Dal Rasam

தேவையான பொருட்கள்:

வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கப்

தக்காளி - 1

புளிகரைசல் - 1 கப்

கொத்தமல்லித்தழை - சிறிது

ரசப்பொடி - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

பொடிக்க:

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

பூண்டு - 3 பல்

பச்சை மிளகாய் - 1

சின்ன வெங்காயம் - 1

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்

பெருங்காயம் - வாசனைக்கு

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை விளக்கம்:

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தக்காளியை துண்டுகளாகி போட்டு வதக்கவும்.இதனுடன் பொடிக்க கொடுத்துள்ளவைகளை கரகரப்பாக பொடித்து போட்டு லேசாக வதக்கி மஞ்சள்தூள், உப்பு மற்றும் புளிகரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

*பச்சை வாசனை போனதும் ரசப்பொடி மற்றும் வேகவைத்த துவரம்பருப்பு சேர்க்கவும்.

*நுரை வரும் போது மல்லித்தழைதூவி இறக்கி தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து சேர்க்கவும்

Related Videos