முருங்கைக்காய் கத்திரிக்கா மாங்கா சாம்பார் | Drumstick Brinjal Mango Sambar

*மாங்காயை கடைசியாக தான் சேர்க்கவேண்டும்.முதலிலேயே சேர்த்தால் குழைந்துவிடும்.


*மாங்காயின் புளிப்பிற்கேற்ப புளிகரைசலை சேர்க்கவும்.

*நான் பெரிய கத்திரிக்காய் சேர்த்து செய்துள்ளேன்.சிறிய வயலட் கத்திரிக்காய்  2 சேர்த்து செய்தால் நல்ல சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு - 1/3 கப்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
நறுக்கிய தக்காளி -1 சிறியது
கீறிய பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி -2 டீஸ்பூன்
முருங்கைகாய் -1
கத்திரிக்காய் - 1 சிறியது
மாங்காய் - 1
புளிகரைசல் -1/2 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

வடகம் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத்தூள் -1/2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*முருங்கை மற்றும் கத்திரிக்காய் இவற்றை நடுத்தர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.மாங்காயை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

*பருப்பை மஞ்சள்தூள் மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*பின்  தக்காளி மற்றும் உப்பு  சேர்த்து குழைய வதக்கவும்.

*கத்திரிக்காய் மற்றும் முருங்கை சேர்த்து வதக்கி 1 கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*காய் வெந்ததும் சாம்பார் பொடி மற்றும் புளிகரைசல் செர்த்து மேலும் கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் மாங்காய் துண்டுகள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து வேகவைத்த பருப்பினை சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து சேர்க்கவும்.கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

Related Videos