திடீர் ரசம் | Thedir rasam
தேவையான பொருட்கள்:
புளி - 1 எலுமிச்சைபழளவு
தக்காளி - 1
உப்பு + எண்ணெய்= தேவைக்கு
துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லித்தழை - சிறிது
ரசப்பொடிக்கு:
தனியா - 2டீஸ்பூன்
துவரம்பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகு - 11/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை விளக்கம்:
*ரசப்பொடிக்கு குடுத்துள்ளவைகளை வறுக்காமல் பொடிக்கவும்.தக்காளியை பொடியாக நறுக்கவும்.
*புளியை 2 கப் நீர்விட்டு கரைத்துக் கொள்ளவும்.அதில் உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்க்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து தக்காளியை போட்டு நன்கு மசிக்க வதக்கவும்.
*பின் புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
*அதில் 1 டேபிள்ஸ்பூன் துவரம்பருப்பை அப்படியே போடவும்.
*நன்கு கொதித்ததும் ரசப் பொடியைப் போட்டு கொதிக்கவிட்டு 10நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
*இந்த ரசம் மிக அருமையாக வித்தியாசமான சுவையில் இருக்கும்.