காயல் ஸ்பெஷல் ரசம்(புளியாணம்) | Kayal special rasam

தேவையான பொருட்கள்:

புளி - 1 எலுமிச்சை பழளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

பொடிக்க:

சீரகம் - 3/4 டீஸ்பூன்
மிளகு - 3/4 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
காய்ந்த மிளகாய் - 1
பூண்டுப்பல் - 4
சின்ன வெங்காயம் - 2
கறிவேப்பிலை - 1 இனுக்கு
தேங்காய்த்துறுவல் - 3/4 டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*பொடிக்க கொடுத்துள்ளவைகளை இடிப்பானில் போட்டு கரகரப்பாக பொடிக்கவும்.புளியை 1 1/2 கப் அளவில் கரைத்து மஞ்சள்தூள் மற்றும் உப்பு கலந்து வைக்கவும்.

*பத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து தக்காளியை வெட்டி போட்டு வதக்கவும்.தக்காளி மசிந்ததும் பொடித்த பொடிகளைப்போட்டு லேசாக வதக்கி புளிக்கரைசலை ஊற்றவும்.

*நுரை வரும் போது பெருங்கயத்தூள் மற்றும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

Related Videos