தக்காளி ரசம் | Tomato Rasam
தேவையான பொருட்கள்:
தக்காளி - 3
புளி - 1கோலிகுண்டளவு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
ரசப்பொடிக்கு:
துவரம்பருப்பு - 1 டீஸ்பூன்
தனியா - 3 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பில்லை - சிறிது
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1சிறுதுண்டு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*தக்காளியை கொதிநீரில் போட்டு தோலெடுத்து அரைக்கவும்.அதனுடன் புளியை 1/2 கப் நீரில் கரைத்து தக்காளியுடன் சேர்க்கவும்.
*ரசப்பொடிக்கு கொடுத்துள்ளவைகளில் பொடிக்கவும்.
*தக்காளி கரைசலில் உப்பு, மஞ்சள்தூள் மற்றும் தேவையான நீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
*நன்கு கொதித்ததும் ரசப்பொடியை தூவி 5 நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை இறக்கவும்.
*கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளில் தாளித்து கொட்டவும்