ஒட்ஸ் ஆனியன் ஊத்தாப்பம் | Oats Onion Uthappam
தேவையான பொருட்கள்:
ஒட்ஸ் - 1/2 கப்
கோதுமைரவை - 1/2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*ஒட்ஸ் மற்றும் கோதுமைரவை இவற்றை வெறும் கடாயில் வறுத்து 1/2 மணிநேரம் தேவையானளவு நீர் விட்டு ஊறவைக்கவும்.
*ஊறியதும் மிக்ஸியில் அரைத்து தோசைமாவு பதத்திற்க்கு உப்பு சேர்த்து கரைக்கவும்.
*தோசைக்கல்லில் மாவை தடினமாக எடுத்து ஊற்றி அதன் மேல் வெங்காயத்தை தூவி,சுற்றிலும் எண்ணெய் விடவும்.
*ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.
*சூடாக சட்னி,சாம்பாருடன் பறிமாறவும்.