மாதுளம்பழ லெமனேட்
தேவையான பொருட்கள்:
மாதுளம்பழம் - 1
எலுமிச்சை பழம் - 6
சர்க்கரை - 3/4 = 1 கப்
செய்முறை விளக்கம்:
*மாதுளம்பழத்தில் முத்துக்களை எடுத்து அரைத்து சாறெடுத்து வடிக்கட்டவும். எடுக்கவும்.எலுமிச்சை பழத்தில் சாறெடுக்கவும்.
*அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு 4 கப் நீர் விட்டு பிசுபிசுப்பு பதம் வந்தவுடன் இறக்கவும்.
*ஆறியதும் மாதுளை மற்றும் எலுமிச்சை சாறுடன் ஒன்றாக கலந்து ப்ரிட்ஜில் வைத்திருந்து சில்லென்று பருகவும்.
பின் குறிப்பு:
*மாதுளம்பழத்தை கொட்டையுடன் சாப்பிடுவதுதான் நல்லது.இதுபோல் எப்பவாவது செய்து குடிக்கலாம்.