மாந்தோல் குழம்பு | Dry Mango Peel Kuzhambu

தேவையான பொருட்கள்: 

மாந்தோல் - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டுப்பல் - 6
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு + நல்லெண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

வடகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* மாந்தோலை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து குக்கரில் சிறிதளவு நீர் வைத்து நன்கு குழைய வேகவைக்கவும்.

*வெந்ததும் நன்கு மசித்துக்கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வடகம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், பூண்டுப்பல் சேர்த்து வதக்கி மசித்த மாந்தோல், சாம்பார்பொடி, தேவையானளவு நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

*நன்கு கொத்தித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.


பின் குறிப்பு:

* மாந்தோலில் நிறைய உப்பு இருப்பதால் உப்பின் அளவை பார்த்து போடவும்.

Related Videos