ஒட்ஸ் அடை | Oats Adai
தேவையான பொருட்கள்:
ஒட்ஸ் - 1/2 கப்
ப்ரவுன் அரிசி - 1/2 கப்
தோல் பாசிப்பருப்பு,கொள்ளு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*ப்ரவுன் அரிசி, பாசிப்பருப்பு மற்றும் கொள்ளு குறைந்தது 4 மணி நேரம் ஊறவைக்கவும்.ஒட்ஸை சிறிது நேரம் ஊறவிடவும்
*அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
*இதனுடன் ஊறிய ஒட்ஸ் மற்றும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்துக் கலக்கவும்.
*தோசைக்கல்லில் அடைகளாக சுட்டெடுக்கவும்.