ஒட்ஸ் பிஸிபேளாபாத் | oats bisi bele bath
தேவையான பொருட்கள்:
ஒட்ஸ் - 1கப்
அரிந்த கத்திரிக்காய்,முருங்கைக்காய்
பீன்ஸ்,கேரட் கலவை -- 1 கப்
வேகவைத்த துவரம் பருப்பு - 1/2 கப்
புளிகரைசல் - 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
மஞ்சள்தூள் -1 சிட்டிகை
தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம் தலா - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை,பெருங்காயம் -சிறிது
மோர் மிளகாய் - 2
வறுத்து பொடிக்க:
காய்ந்த மிளகாய் - 1
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*வறுத்து பொடிக்க குடுத்துள்ள பொருட்களை வெரும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்.
*ஒட்ஸை சிறிது வெந்நீர் ஊற்றி பிசிறிக் கொள்ளவும்.
*காய்களை சிறிது மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
*துவரம்பருப்பு, ஒட்ஸ், வெந்த காய்கறி, உப்பு, புளிகரைசல் மற்றும் வறுத்தரைத்த பொடி கலந்து அடுப்பில் சிறிது நேரம் வைத்துக் கிளறவும்.
*எல்லாம் சேர்ந்து வந்ததும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களை தாளித்துக் கொட்டவும்.
*வாசனையான ஒட்ஸ் பிஸிபேளாபாத் ரெடி.
கவனிக்க:
*டயட்டில் இல்லாதவர்கள் தாளிக்கும் போது எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம்.வாசனை கமகமக்கும்.