திருநெல்வேலி சொதி | Tirunelveli Sodhi

தேவையான பொருட்கள்: 

வேகவைத்த பாசிப்பருப்பு - 1/4 கப்
நீளமாக அரிந்த வெங்காயம் - 1
பூண்டுப்பல் - 5
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
கேரட்  - 2
பீன்ஸ் - 10
உருளைகிழங்கு  - 2 பெரியது
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க‌:

பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 3
பிரிஞ்சி இலை  -1
ஏலக்காய் - 2
எண்ணெயில் வதக்கி அரைக்க‌
இஞ்சி துண்டுகள் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4

செய்முறை விளக்கம்:

*எண்ணெயில் வதக்கி அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.

*தேங்காயை துருவி முதல் பால் 1/2 கப்,2ஆம் பால் 3/4 கப் மற்றும் 3ஆம் பால் 1 கப் எடுக்கவும்.

*காய்களை நடுத்தர துண்டுகளாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாலிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம் மற்றும் பூண்டுப்பல் சேர்த்து வதக்கவும்.

*பின் காய்கள் சேர்த்து வதக்கி மஞ்சள்தூள், உப்பு மற்றும் 3 ஆம் பால் சேர்த்து வேகவிடவும்.

*3/4 பாகம் காய்கள் வெந்ததும் 2ஆம் பால் சேர்த்து வேகவிடவும்.

*காய்கள் முழுவதும் வெந்ததும் அரைத்த பச்சை மிளகாய் விழுது மற்றும் வேகவைத்த பாசிபருப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் 1ஆம் பால் சேர்த்து நுரை வரும் போது இறக்கவும்.

*சூடு சிறிது அடங்கியதும் எலுமிச்சை சாறு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

*இதனை சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

பின் குறிப்பு:

*1ஆம் பால்  சேர்த்ததும் சொதியை கொதிக்கவிடக்கூடாது.

Related Videos