பீர்க்கங்காய் சொதி | Peerkangai Sodhi

தேவையான பொருட்கள்: 

பீர்க்காங்காய் -1 பெரியது
நறுக்கிய வெங்காயம் -1
நறுக்கிய தக்காளி -1
நசுக்கிய பூண்டுப்பல்- 3
கீறிய பச்சை மிளகாய்- 2
பால் -1/2 கப்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய்- தேவைக்கு

தாளிக்க‌:
கடுகு + உளுத்தம்பருப்பு- தலா 1/2 டீஸ்பூன்
சீரகம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை விளக்கம்:

*பீர்க்காங்காயை தோல் சீவி சதுரதுண்டுகளாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*பின் தக்காளி, பீர்க்கங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி உப்பு மற்றும் மஞ்சள்தூள் மற்றும் 1/2 கப் நீர் சேர்த்து 5- 6 நிமிடங்கள் வேகவிடவும்.

*காய் வெந்ததும் கடைசியாக பால் சேர்த்து 1 கொதி வந்ததும் இறக்கவும்.

பின் குறிப்பு:

*பீர்க்கங்காயின் தோலில் துவையல் செய்யலாம்.

Related Videos