சௌ சௌ கூட்டு | Chayote Kootu
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1/4 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
சௌ சௌ - 1
நறுக்கிய வெங்காயம் - 1
கீறிய பச்சை மிளகாய் -2
தேங்காய்த்துறுவல் -1/4 கப்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
கடுகு + உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
சோம்புப்பொடி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
செய்முறை விளக்கம்:
*கடலைப்பருப்பை மஞ்சள்தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து முழ்குமளவு நீர் விட்டு குக்கரில் 3 விசில் வரை வேகவைக்கவும்
*சௌ சௌ தோல் சீவி துண்டுகளாகவும்.பருப்பு வெந்ததும் நறுக்கிய காய், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் குக்கரில் 1 அல்லது 2 விசில் வரை வேகவைக்கவும்
*கடாயில் மீதமுள்ள எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வேகவைத்த பருப்பு கய் கலவை சேர்க்கவும்
*பின் தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்
பின் குறிப்பு:
*சௌ சௌ தோலினை தூக்கி போடாமல் துவையல் செய்யலாம்