ஆவாரம்பூ கூட்டு | Aavarampoo Kootu
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு -1/2 கப்
ஆவாரம்பூ -1/2 கப்
கீறிய பச்சை மிளகாய் - 1
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1
செய்முறை விளக்கம்:
*குக்கரில் கடலைப்பருப்பு மற்றும் மஞ்சள்தூள் மற்றும் தேவையானளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.
*ஆவாரம்பூவினை அலசி நீரினை நன்கு வடிக்கவும்.
*பருப்பு வெந்ததும் ஆவரம்பூ மற்றும் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து மேலும் 3-5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
*வெந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.