நூல்கோல் குருமா | Kohlrabi Kurma
தேவையான பொருட்கள்:
நூல்கோல் - 2 சிறியது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எண்ணெயில் வதக்கி அரைக்க
வெங்காயம் - 1
தக்காளி - 1 சிறியது
பச்சை மிளகாய் - 3
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
அரைக்க:
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
கசகசா,சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
கிராம்பு - 3
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*எண்ணெயில் வதக்கி அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைக்கவும்.தேங்காயுடன் சோம்பு மற்றும் கசகசா மட்டும் வறுத்து நைசாக அரைக்கவும்.
*பாத்திரத்தில் நூல்கோலை தோல் சீவி துண்டுகலாகி மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து வேகவிடவும்.
*காய் வெந்ததும் வெங்காயவிழுது மற்றும் தேங்காய் விழுது சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.
*கடைசியாக தாளித்து சேர்க்கவும்.