மைசூர் ரசம் | Mysore Rasam
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - 1/4 கப்
தக்காளி - 1 பெரியது
புளி - எலுமிச்சை பழளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தேங்காய்த்துறுவல் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1/2+1/4 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 1/2 டீஸ்பூன்
எண்ணெயில் வறுத்து பொடிக்க:
தனியா - 1 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.புளியை ஊறவைத்து 1 1/2 கப் அளவில் கரைக்கவும்.
*எண்ணெயில் வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களுடன் தேங்காய் சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்.
*பாத்திரத்தில் 1/4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு துண்டுகளாகிய தக்காளி, சிறிது கொத்தமல்லித்தழை போட்டு நன்கு வதக்கி புளித்தன்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
*பச்சை வாசனை போனதும் பொடித்த பொடியை தூவி 5 நிமிடத்திற்க்கு பின் வேகவைத்த துவரம்பருப்பை ஊற்றி நுரை வரும் போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
*பின் நெய் மற்றும் 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்துக் கொட்டவும்.