ஆரஞ்சு பழ ரசம் | Orange Rasam
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2 பெரியது
வேகவைத்த பருப்புதண்ணீர் - 2 கப்
மஞ்சள்தூள்,துருவிய ஆரஞ்சுத்தோல் - தலா1/4 டீஸ்பூன்
ஆரஞ்சு ஜூஸ் - 1/4 கப்
ரசப்பொடி - 1 டீஸ்பூன்
நசுக்கிய பூண்டு - 2 பல்
கொத்தமல்லிதழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து பூண்டுப்பல் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு நன்கு மசிக்க வதக்கவும்.
*பின் உப்பு, வேகவைத்த பருப்புத்தண்ணீர் மற்றும் ரசப்பொடி+மஞ்சள்தூள் சேர்க்கவும்.
*நுரை வரும் போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
*ரசம் லேசாக ஆறியதும் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் தோல் சேர்க்கவும்.
பின் குறிப்பு:
*சூப் போலவும் இந்த ரசத்தை குடிக்கலாம்.இந்த ரசம் இனிப்புள்ள பழத்தில் செய்ததால் இனிப்பு சுவையுடன் இருந்தது.புளிப்பான பழத்தில் செய்தால் இன்னும் நல்லாயிருக்கும்.