மிளகு குழம்பு | Pepper Kuzhambu
தேவையான பொருட்கள்:
புளிகரைசல் - 1 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெயில் வறுத்தரைக்க
பெருங்காயம் - 1 சிறுகட்டி
கறிவேப்பிலை- 1 கொத்து
தனியா - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வறுத்தரைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து அரைத்த கலவையை லேசாக வதக்கி உப்பு மற்றும் புளிகரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.
*குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.