மாங்காய் இஞ்சி குழம்பு | Mango Ginger Kuzhambu
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 10
நறுக்கிய தக்காளி - 1
பூண்டுப்பல் - 8
புளிகரைசல் - 1 கப்
வடகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு
எண்ணெயில் வதக்கி அரைக்க
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
துருவிய மாங்காய் இஞ்சி - 3 டேபிள்ஸ்பூன்
மிளகு,சீரகம் - தலா 1/4 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வதக்கி மைய அரைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெந்தயம், வடகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பூண்டுப்பல் மற்றும் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
*பின் புளிகரைசல் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.