ஜவ்வரிசி கஞ்சி வத்தல்

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 4 கப்
உப்பு - தேவைக்கு

அரைக்க:

சீரகம் - 3 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
பச்சை மிளகாய் - 7

செய்முறை விளக்கம்:

*ஜவ்வரிசியை முதல்நாள் இரவே நீரில் ஊறவைக்கவும்.

*ஒரு கப்=4 கப் தண்ணீர் அளவு,ஒரு பாத்திரத்தில் 16 கப் தன்ணீர் வைத்து கொதிக்கவிடவும்.

*ஜவ்வரிசியை நன்கு கையால் பிசைந்து தண்ணீர் விட்டு கொஞ்சம் கரைத்துக் கொள்ளவும்.

*கொதித்ததும் அரைத்த விழுது மற்றும் உப்பு மற்றும் ஜவ்வரிசி சேர்த்து நன்கு துழவி விடவும்.மாவு நன்கு வெந்ததும் இறக்கவும்.

*வெயிலில் ஒரு காட்டன் துணியில் மாவை ஒரு ஸ்பூனால் கொஞ்ச கொஞ்சமா ஊற்றி எடுக்கவும்.

*மாலையில் நன்கு காய்ந்திருக்கும் அதை துணியின் மறுபக்கத்தில் தண்ணீர் தெளித்து வத்தலை எடுத்து காற்றோட்டமாக வைக்கவும்.

*பின் மறுநாள் நன்கு வெயிலில் காயவைத்து எடுக்கவும்.

*தேவையான போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

பின் குறிப்பு:

1. தண்ணிர் போதுமானதா இல்லையெனில் சிறிது வெந்நீர் சேர்க்கவும்.குளிர்ந்த நீர் சேர்க்ககூடாது,சேர்த்தால் வத்தல் விண்டுபோய்விடும்.

2. மாவு வெந்ததா எனபார்க்க கையில் தண்ணிர் தோட்டு மாவு தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டக்கூடாது.

3. வத்தலில் எப்போதும் உப்பு குறைவா போடவும்.வாயில் வைத்து பார்க்கும்போது போதுமானதா இருக்காதமாதிரி இருக்கும்,ஆனால் காய்ந்த பின் எண்ணையில் பொரித்து சாப்பிட்டால் சரியா இருக்கும்.

4. பாதி தண்ணீர் மற்றும்  பாதி தக்காளி சாறு சேர்த்து செய்தால் தக்காளி ஜவ்வரிசி வத்தலாகும். இன்னும் நல்லாயிருக்கும்.

Related Videos