கத்திரிக்காய் ரசவாங்கி | Brinjal Rasavangi
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 1 பெரியதுபுளிபேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
வேகவைத்த துவரம்பருப்பு - 1/4 கப்தேங்காய்ப்பால் - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்பச்சை மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 3/4 டீஸ்பூன்உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
கா.மிளகாய் - 3
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி -1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*புளிவிழுதினை 1 1/2 கப் நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போடு தாளித்துபுளிகரைசல், உப்பு, மஞ்சள்தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்ததும் கத்திரிகாயை சிறுதுண்டுகளாக நறுக்கி பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும்.*வெந்ததும் வேகவைத்த து.பருப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.
*பின் தேங்காய்ப்பால் சேர்த்து சிறிதுநேரம் கொதிக்கவைத்து இறக்கவும்.
பின் குறிப்பு:
*கத்திரிக்காயில் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.