வெஜ் பேஸ்ட்ரி வீல்ஸ்
தேவையான பொருட்கள்:
பஃப் பேஸ்ட்ரி ஷீட்- 1 பெரியது
சீரகம் - 1 டீஸ்பூன்
உருக்கிய பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
வேகவைத்து மசிக்க:
பொடியாக நறுக்கிய கேரட் - 1 பெரியது
பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 8
தோல் சீவி துண்டுகளாகிய உருளை - 1 பெரியது
ப்ரோசன் பட்டாணி - 1/4 கப்
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள்,சோம்புத்தூள் -தலா 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*வேகவைத்து மசிக்க கொடுத்துள்ள பொருட்களுடன் உப்பு மற்றும் 1 கப் நீர் விட்டு குக்கரில் 5 விசில் வரை வேகவைத்து நன்கு மசிக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு சீரகத்தை போட்டு தாளித்து மசித்த கலவையை சேர்த்து நீர் சுண்டும் வரை நன்கு கிளறி ஆறவைக்கவும்.
*பஃப் ஷீட்டை ப்ரிசலிருந்து 1/2 மணிநேரத்திற்க்கு முன் எடுத்து வெளியே வைக்கவும்.
*பஃப் ஷீட்டை மாவு தூவி சதுரமாக தேய்த்து காய்கறி கலவையை சமமாக பரப்பவும். 4 ஓரங்களிலும் சிறிது இடைவெளி விட்டு பரப்பவும்.
*பேஸ்ட்ரி ஷீட்டை ஒரு ஓரத்திலிருந்து இறுக்கமாக சுற்றி,ஷீட்டின் இறுதியில் சிறிது நீர் தடவி ஒட்டவும்.
*ரோல் செய்த பேஸ்ட்ரி ஷீட்டை க்ளியர் ராப் பேப்பரில் சுற்றி 15 நிமிடம் ப்ரீசரில் வைக்கவும்.
*பின் கத்தியால் விரும்பிய வடிவத்தில் வெட்டி அவன் டிரேயில் அலுமினியம் பேப்பரில் சிறிது இடைவெளிவிட்டு ரோல்ஸ்களை அடுக்கி ப்ரெஷில் பட்டரால் தடவவும்.
*200°Cமுற்சூடு செய்த அவனில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.10 நிமிடத்தில் ஒரு புறம் வெந்ததும் மறுபறம் திருப்பி விடவும்.