ஒலன் | Olan
தேவையான பொருட்கள்:
நறுக்கிய வெண்பூசணி துண்டுகள் - 250 கிராம்
வேகவைத்த காராமணி - 1/4 கப்
முதலாம் தேங்காய்ப்பால் - 1/4 கப்இரண்டாம் தேங்காய்ப்பால் - 1 கப்
கீறிய பச்சை மிளகாய் -3கறிவேப்பிலை - 1 கொத்து
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*இரண்டாம் தேங்காய்ப்பாலில் பூசணிதுண்டுகள், உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும்.
*காய் வெந்ததும் காராமணி சேர்க்கவும்.
*க்ரேவி திக்கான பதம் வந்ததும் முதலாம் தேங்காய்ப்பால், கறிவேப்பிலை மற்றும்தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கவும்.
*சூடான சாதம் மற்றும் காரகுழம்புடன் பரிமாற நன்றாக இருக்கும்.
பின் குறிப்பு:
*முதலாம்பால் சேர்த்ததும் க்ரேவியை கொதிக்கவிடக்கூடாது.
*பூசணிக்காய் சீக்கிரம் வெந்துவிடும்.குழைய வேகவிடாமல் 3/4 பதம் வெந்தால் போதும்.