மோரு காய்ச்சியது | Moru Kachiyathu

தேவையான பொருட்கள்: 

மோர் -3 கப்

பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் -5()6

பொடியாக நறுக்கிய பூண்டுப்பல்- 2

பொடியாக நறுக்கிய இஞ்சி -1 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -2

மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் -1/4 டீஸ்பூன்

உப்பு -தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்- 1 டீஸ்பூன்

கடுகு- 1/2 டீஸ்பூன்

வெந்தயம்- 1/4 டீஸ்பூன்

சீரகம் 1/4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் 1

கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை விளக்கம்:

*மோரினை உப்பு சேர்த்து நன்கு கடைந்துக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து இஞ்சிபூண்டு.மிளகாய் மற்றும் வெங்காயம் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கியதும் மோரினை ஊற்றவும்.

*5- 7 நிமிடங்கள் கிளறி விடவும்.கொதிக்கவிட வேண்டாம்.

Related Videos