தீயல் | Theeyal

தேவையான பொருட்கள்:

புளி- எலுமிச்சை பழளவு

உப்பு -தேவைக்கு

தாளிக்க

நல்லெண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன்

கடுகு+வெந்தயம்- தலா 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை- 1 கொத்து

அரைக்க

தேங்காய்த்துறுவல்- 2 கப்

வெந்தயம்- 1/4 டீஸ்பூன்

மிளகு +சீரகம்-தலா 1/4 டீஸ்பூன்

சின்ன வெங்காயம்- 2

கறிவேப்பிலை- 1 கொத்து

தனியாப்பொடி-2 டீஸ்பூன்

மிளகாய்ப்பொடி-2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய்-1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெந்தயம்மிளகுசீரகம்கறிவேப்பிலைதேங்காய்த்துறுவல் மற்றும் சின்ன வெங்காயம் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தேங்காய் நன்கு பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்கவும்.அதே சமயம் தீய்ந்து விடாமலும் இருக்க வேண்டும்.

*அடுப்பை அணைத்து விட்டு தனியா மற்றும் மிளகாய்பொடிகளை சேர்க்கவும்.கடாயின் சூட்டிலயே வறுப்பட்டுவிடும்.

*ஆறியதும் நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

*புளியை 2 கப் நீர் அளவில் கரைத்து அரைத்த விழுதினை உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

*முருங்கைக்காயை தனியாக நீர் மற்றும் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து புளிகரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

*குழம்பு நன்றாக கொதிக்கும் போது வேகவைத்த முருங்கையை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதித்து இறக்கவும்.

*இதற்கு பருப்புத்துவையல் பெஸ்ட் காம்பினேஷன்.

பின் குறிப்பு:

*வெண்டைக்காய்,பாகற்காய்,கத்திரிக்காய் சேர்க்கும் போது தாளிப்பின் போது எண்ணெயில் வதக்கி புளிகரைசலில் வேகவிட்ட பின் மசாலாவை சேர்க்கவும்.

*சேனை,முருங்கை,கொத்தவரங்காய் சேர்க்கும் போது தனியாக உப்பு சேர்த்து வேகவைத்த பின் புளிகரைசல் மற்றும் மசாலா சேர்த்து தாளித்து சேர்க்கவும்.

*பூண்டு,வெங்காயம் சேர்க்கும் போது தாளிதத்தின் போதே எண்ணெயில் நன்கு வதக்கி புளிகரைசல் மற்றும் மசாலா சேர்க்கவும்.

*எல்லா காய்களும் ஒன்றாக போட்டும் செய்யலாம்.அருமையாக இருக்கும்.ஆனால் பாகற்காயுடன் மற்ற காய்களை சேர்க்க வேண்டாம்.

Related Videos