ஸ்பைசி ராகி+கினோவா(Quinoa) குக்கீஸ்

தேவையான பொருட்கள்: 

கேழ்வரகு மாவு - 1 கப்
கினோவா(Quinoa) - 1 கப்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
பட்டர்(அறை வெப்பநிலையில்) - 1/2 கப்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகு,சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
எள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
தயிர் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*கினோவாவை வெறும் கடாயில் வாசனை வறும் வரை வறுக்கவும்.ஆறியதும் அதனுடன் மிளகு,சீரகத்தை சேர்த்து மிக்ஸியில் மாவாக்கவும்.

*ராகியையும் ,கினோவா மாவையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் பட்டரை போட்டு நன்கு கைகளால் மிருதுவாக பிசையவும்.அதனுடன் அரிந்த ப.மிளகாய், கறிவேப்பிலை, எள், பெருங்காயத்தூள் மற்றும் உப்பு அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*பின் சிறிது சிறிதாக ராகி மற்றும் கினோவா மாவுகளை சேர்க்கவும்.தேவையெனில் மட்டும்,மாவு சப்பாத்தி மாவு பதத்திற்க்கு வர தயிர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*பிசைந்த மாவினை சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து லேசாக அழுத்தவும் அல்லது குக்கீ கட்டரை வைத்து உபயோகப்படுத்தவும்.

*அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வத்து குக்கீஸ்களை இடைவெளிவைத்து அடுக்கவும்.

*180 டிகிரிக்கு முற்சூடு செய்த அவனில் 20-25 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

பின் குறிப்பு:

*வெளியில் எடுக்கும் போது வேகாத மாதிரி இருக்கும் ஆறியதும் வெந்து இருக்கும்.
*பேக் செய்யும் போது வாசனை கமகமன்னு இருக்கும்.

Related Videos