கேரளா ஸ்டைல் காளன் | Kerala Style Kalan
தேவையான பொருட்கள்:
சேனைகிழங்கு 1/4 கப் நறுக்கியதுவாழைக்காய் 1/2 கப் நறுக்கியது
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்மிளகுதூள் 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன்உப்பு தேவைக்கு
நெய் 1 டீஸ்பூன்கறிவேப்பிலை 1 கொத்து
புளித்த தயிர் 2 கப்வறுத்து பொடித்த வெந்தயப்பொடி 1/4டீஸ்பூன்
அரைக்க:
தேங்காய்த்துறுவல் 1 கப்
சீரகம் 1 டீஸ்பூன்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன்
கடுகு 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் 1
கறிவேப்பிலை 1 கொத்து
செய்முறை விளக்கம்:
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைத்து ,புளித்த தயிரில் கலந்து ,உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கி வைக்கவும்.
*சேனையை முதலில் 1/4 மஞ்சள்தூள் சேர்த்து 1/4 பாகம் வரை வேகவைத்து நீரை வடிக்கவும்.இது சேனையின் காரல் தன்மையை போக்கும்.
*மீண்டும் சேனையை சிறிது நீர் ஊற்றி மிளகுதூள் மற்றும் மிளகாய்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
*பாதியளவு வெந்ததும் கறிவேப்பிலை மற்றும் வாழைக்காயை சேர்த்து வேகவைக்கவும்.
*காய்கள் நீர் சுண்டும் அளவு வேகவைத்த பின் லேசாக மசிக்கவும்.
*பின் தயிர் கலவையை சேர்த்து,இடைவிடாமல் கலக்கி கொண்டே இருக்கவும்.
*லேசாக கொதித்து வரும் போது இறக்கி நெய் மற்றும் வெந்தயப்பொடி சேர்க்கவும்.
*கடைசியாக தாளித்து சேர்க்கவும்.
பின் குறிப்பு:
*தயிர் கலவையை ஊற்றியபின் சிறுதீயில் கலக்கிகொண்டே இருக்கவும்,இல்லையெனில் தயிர் திரிந்துவிடும்.