தக்காளிக்காய் அவியல் | Raw Tomato Avial

தேவையான பொருட்கள்: 

தக்காளிக்காய்- 6 நடுத்தர அளவு

மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்

உப்பு -தேவைக்கு

தேங்காய் எண்ணெய்- 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து

அரைக்க:

தேங்காய்த்துறுவல்- 1/2 கப்
பச்சை மிளகாய்- 2

சீரகம்- 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம்- 2

செய்முறை விளக்கம்:

*தக்காளிக்காயினை நீளவாக்கில் வெட்டி,பாத்திரத்தில் போட்டு மஞ்சள்தூள் சேர்த்து நீரினை மிக குறைவாக சேர்த்து வேகவிடவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் சின்ன வெங்காயம் தவிர மற்ற அனைத்தையும் நைசாக அரைக்கவும்.கடைசியாக சின்ன வெங்காயம் சேர்த்து 1 சுற்று சுற்றி எடுக்கவும்.

*காய் வெந்ததும் அரைத்த மசாலா சேர்த்து மேலும் 3- 4 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும்.

*கடைசியாக தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

*15 நிமிடங்கள் கழித்து பரிமாறினால் மிக சுவையாக இருக்கும்.

பின் குறிப்பு:

*காய் சீக்கிரம் வெந்து விடும்,அதனால் கவனம் தேவை.

*மசாலா சேர்த்து கிளறும் போது கரண்டியின் பின்புறத்தை பயன்படுத்தவும்,இதனால் காய் குழையாமல் இருக்கும்.

*கறிவேப்பிலை தே.எண்ணெய் சேர்த்த பின்,சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.அவையிரண்டு மணமும் சேர்ந்து சாப்பிட சூப்பராயிருக்கும். 

 

Related Videos