கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு | Brinjal Poricha Kuzhambu

தேவையான பொருட்கள்: 

பொடியாக நறுக்கிய பிஞ்சு கத்திரிக்காய்- 8

புளிகரைசல் -1 கப்

மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வேகவைத்த துவரம்பருப்பு- 1/4 கப்

வேகவைத்த வேர்கடலை- 1 கைப்பிடி
சீரகம்- 3/4 டீஸ்பூன்

தேங்காய்த்துறுவல்- 2 டேபிள்ஸ்பூன்
உப்பு- தேவைக்கு

எண்ணெயில் வறுத்தரைக்க:

மிளகு- 1/2 டீஸ்பூன்

வெ.உளுத்தம்பருப்பு -2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்- 6

கறிவேப்பிலை- 1 கொத்து

தாளிக்க:

எண்ணெய் -2 டீஸ்பூன்

கடுகு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து

பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்- 1

செய்முறை விளக்கம்:

*எண்ணெயில் வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களுடன் சீரகம் மற்றும் தேங்காய்த்துறுவல் சேர்த்து மைய அரைக்கவும்.

*பாத்திரத்தில் 1 டீஸ்பூன் ஊற்றி நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.

*பின் புளிகரைசல்உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

*காய் வெந்ததும் அரைத்த விழுது மற்றும் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்றாக கொதித்து வரும் போது வேகவைத்த வேர்கடலை சேர்க்கவும்.

*கடைசியாக மீதமுள்ள எண்ணெயில் தாளித்து சேர்க்கவும்.

Related Videos