மாம்பழ புளிசேரி | Mambazha Pulissery

தேவையான பொருட்கள்: 

மாம்பழம்- 2 பெரியது

கெட்டி தயிர்- 1 கப்

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 2

உப்பு -தேவைக்கு

அரைக்க:

தேங்காய்த்துறுவல் -3/4 கப்

மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்

தாளிக்க:

தே.எண்ணெய்- 1டீஸ்பூன்

கடுகு- 1/4 டீஸ்பூன்

வெந்தயம்- 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை விளக்கம்:

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*பின் உப்பு  மாம்பழத்தை தோலுடன் பெரிய துண்டுகளாக நறுக்கி முழ்குமளவு நீர் ஊற்றி வேகவிடவும்.

*வெந்ததும் அரைத்த விழுதினை சேர்த்து மேலும் கொதிக்கவைத்து இறக்கவும்.

*ஆறியதும் கடைந்த தயிரினை சேர்த்து கலக்கவும்.

பின் குறிப்பு:

*இது ஊற்றி சாப்பிடும் பதத்தில் இருக்க வேண்டும்.அதனால் நீரின் அளவை அதற்கு ஏற்றாற்போல் சேர்க்கவும்.

 

 

Related Videos