சௌசௌத் தோல் துவையல் | Chayote Peel Thokku

தேவையான பொருட்கள்: 

சௌசௌத் தோல் - ஒரு காயின் தோல்பகுதி மட்டும்.

உளுத்தம்பருப்பு - 1டேபிள்ஸ்பூன்

கடலைப்பருப்பு - 3/4 டேபிள்ஸ்பூன்

தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

கறிவேப்பிலை - சிறிது

வடகம் -1 டேபிள்ஸ்பூன்

புளி - 1 கொட்டைப்பாக்குளவு

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்

பெருங்காயம் – வாசனைக்கு

செய்முறை விளக்கம்:

*வெறும் கடாயில் உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு வருத்துக்கொள்ளவும்.

*சிறிது எண்ணெய் விட்டு வடகத்தை பொரித்து தனியாக வைக்கவும்.

*மீதிருக்கும் எண்ணெயில் சௌசௌத் தோல், தேங்காய்த்துருவல், கறிவேப்பில்லை மற்றும் காய்ந்த மிளகாயை வதக்கவும்.

*ஆறியதும் அனைத்தையும் உப்பு மற்றும் புளி சேர்த்து கொஞ்ச கொஞ்சமாக நீர் சேர்த்து மைய கெட்டியாக அரைக்கவும்.

*தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து நன்கு வதக்கி ஆறவைத்து பயன்படுத்தவும்.

Related Videos