பட்டாணி புலாவ் | Peas Pulao
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி - 2 கப்
ப்ரோசன் பட்டாணி - 3/4 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு+ஏலக்காய் - தலா 3
பிரியாணி இலை -2
செய்முறை விளக்கம்:
*அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
*குக்கரில் வெண்ணெய் போட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கவும்.
*வதங்கியதும் அரிசி , உப்பு, 2 கப் நீர் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.