உடுப்பி சாம்பார் | Udupi sambar
உடுப்பி சாம்பாரில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் செய்வது தான் இதன் சிறப்பு.
இதில் கத்திரிக்காய்,கேரட்,முருங்கைக்காய்,வெள்ளை பூசணி சேர்த்து செய்துள்ளேன்.காய்கள் இல்லாமலும் செய்யலாம்.
இந்த சாம்பார் இட்லி,தோசை,சாதம் ,பொங்கல் என அனைத்துக்கும் நன்றாக இருக்கும்.
மசாலவை ப்ரெஷ்ஷாக பொடித்து செய்வதும்,கடைசியாக வெல்லம் சேர்ப்பதும் சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
புளிகரைசல் - 1 கப்
வெல்லம் -சிறுதுண்டு
உப்பு +எண்ணெய் -தேவைக்கு
பருப்புடன் சேர்த்து வேகவைக்க
துவரம்பருப்பு - 1/3 கப்
மஞ்சள்தூள் -1/2டீஸ்பூன்
காய்கள் -1/2 கப்
எண்ணெயில் வறுத்து பொடிக்க:
தேங்காய்த்துறுவல் -1/4 கப்
காய்ந்த மிளகாய் -4
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை -1 கொத்து
தனியா- 2 டீஸ்பூன்
சோம்பு -1/2 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*பருப்புடன் கொடுக்கபட்ட பொருட்களை சேர்த்து வேகவைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து புளிகரைசல் மற்றும்
உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
* கடைசியாக வெல்லம் சேர்த்து இறக்கவும்.
பின் குறிப்பு:
*வெல்லம் சேர்ப்பதே இந்த சாம்பாரின் ஸ்பெஷல்.
*மசாலா பொடிக்கும் போது சோம்பு சேர்ப்பது இதர்கு தனி சுவையும் மணமும் கொடுக்கும்.
*இது சாதத்திற்கும் மிக நன்றாக இருக்கும்.