பொங்கல் | sweet pongal
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி - 1 கப்
வெல்லம் -1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை
பால் - 1/2 கப்
முந்திரி,திராட்சை = தேவைக்கு
நெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 2
செய்முறை விளக்கம்:
*அரிசியை கழுவி 1 1/2 கப் நீர் மற்றும் பால் சேர்த்து வேக வைக்கவும்
*வெல்லத்தை சிறிது நீர்விட்டு காய்ச்சி மண்ணில்லாமல் வடிகட்டவும்.
*முக்கால் பாகம் அரிசி வெந்தவுடன் காய்ச்சிய வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து மேலும் குழைய வேகவைக்கவும்
*வெந்ததும் இறக்கி ஏலக்காயை தட்டிப் போடவும்.
*நெய்யில் முந்திரி,திராட்சை வறுத்து பொங்கலில் போடவும்.மீதமுள்ள நெய்யையும் அதன்மேல் ஊற்றி இறக்கவும்