கறிவேப்பிலை குழம்பு | Curry Leaves Kuzhambu
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 10
நறுக்கிய பூண்டுப்பல் - 5
புளிகரைசல் - 1 1/2 கப்
சாம்பார்பொடி - 1 டேபிள்ஸ்பூன்
வடகம் - 3/4 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
வறுத்து அரைக்க:மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 4 கொத்து
செய்முறை விளக்கம்:
*அரைக்க கொடுத்துள்ளவைகளை மைய அரைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வடகத்தை போட்டு தாளித்து வெங்காயம், பூண்டுப்பல், சாம்பார்பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின் புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.கொதித்த பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கவும்.