வத்தல் மோர்குழம்பு | Vathal MOr Kuzhambu

தேவையான பொருட்கள்: 

புளித்த மோர் - 1 கப்

பச்சரிசி - 3/4 டேபிள்ஸ்பூன்

துவரம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

தேங்காய் துருவல் - 11/2 டேபிள்ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறுதுண்டு

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு+எண்ணெய் = தேவைக்கேற்ப

கொத்தமல்லித் தழை - சிறிது

தாளிக்க:

மணத்தக்காளி[அ]சுண்டைக்காய் வத்தல் - 1 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

பெருங்காயம் - வாசனைக்கு

சீரகம் - 1/4 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*பச்சரிசி மற்றும் து.பருப்பு 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*ஊறியதும் இவற்றுடன் தேங்காய், சீரகம் மற்றும் ப.மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

*மோரைக்கடைந்து உப்பு, மஞ்சள்தூள் மற்றும் அரைத்து விழுது சேர்த்து நீர்க்க கரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து மோரை ஊற்றிக் கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழைத் தூவி இறக்கவும்.

பின் குறிப்பு:

*இந்த குழம்பு கொஞ்சம்கூட கசக்காது.காயோ,வெங்காயமோ இல்லாத சமயத்தில் வத்தல் போட்டு செய்யலாம்.ரொம்ப நல்லா இருக்கும்.

*வெளிநாட்டில் தயிர் புளிக்காது,அதற்க்கு நம் புளிப்பு தகுந்த மாதிரி எலுமிச்சைசாறு சேர்த்து கொள்ளலாம்.

Related Videos