மிளகு ரசம் | Pepper Rasam
தேவையான பொருட்கள்:
கொள்ளு வேகவைத்த நீர் - 1கப்
புளி - 1பெரிய நெல்லிக்காயளவு
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
வறுத்து பொடிக்க:
தனியா - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - 1 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிது
செய்முறை விளக்கம்:
*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை கரகரப்பாக பொடிக்கவும்.
*கொள்ளு வேக நீரில் புளியைக் 1 1/2 கப் அளவில் கரைத்து வைக்கவும்.
*பாத்திரத்தில் கரைத்த உப்பு மற்றும் புளியை ஊற்றி கொதிக்க விடவும்.
*நன்கு கொதித்ததும் பொடித்த பொடியை தூவி 5 நிமிடம் கழித்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டவும்.
*கொத்தமல்லித்தழை தூவி பறிமாறவும்.
பின் குறிப்பு:
*உடல்வலி,ஜலதோஷம் இவற்றிற்கு ஏற்ற ரசம்