வெந்தய ரசம் | Vendhaya Rasam
தேவையான பொருட்கள்:
புளிகரைசல் - 2 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
நசுக்கிய பூண்டுப்பல் - 3
கீறிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நருக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கரிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - சிறிது
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை விளக்கம்:
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து பூண்டுப்பல், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி மற்றும் சேர்த்து வதக்கவும்.
*வதங்கியதும் மஞ்சள்தூள், புளிகரைசல் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
*பின் மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்