மோர் ரசம் | Mor Rasam
தேவையான பொருட்கள்:
புளித்த மோர் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
வறுத்து பொடிக்க:
துவரம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 1/2டீஸ்பூன்
கடுகு- 1/4 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி- 1/8 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*வறுக்க குடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் லேசாக வறுத்துப் நைசாக பொடிக்கவும்.
*மோரில் உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை , 1 டேபிள்ஸ்பூன் வறுத்த பொடி மற்றும் 1/2 கப் நீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
*மோர் கலந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து,இடைவிடாமல் கலக்கி கொண்டே இருக்கவும்.லேசாக கொதி வரும் போது இறக்கி தாளித்து சேர்க்கவும்