தர்பூசணி சாம்பார் | Watermelon Sambar

தர்பூசணி பழத்தினை நாம் சாப்பிட்டு விட்டு தோலை தூக்கிப் போடுவோம் அப்படி தூக்கி போடாமல் தோலுக்கும் சிவப்பு பகுதிக்கும் நடுவில் உள்ள வெள்ளைப் பகுதியை சாம்பார் வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.!!

தேவையான பொருட்கள்:

தர்பூசணி வெள்ளைப் பகுதி - 1/2 கப்

துவரம்பருப்பு - 1 கப்

வெங்காயம் - 1 சிறியது

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 4

சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

கொத்தமல்லித் தழை - சிறிது

புளி - 1 கோலிகுண்டளவு

பூண்டுப் பல் - 5

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

உப்பு - தேவைக்கு

எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

பெருங்காயம் - வாசனைக்கு

கறிவேப்பில்லை -சிறிது

காய்ந்த மிளகாய் - 2

செய்முறை விளக்கம்:

*பருப்பை 20 நிமிடம் ஊறவைக்கவும். 

*வெங்காயம் மற்றும் தக்காளி அரியவும்,பச்சை மிளகாயை கீறவும்.தர்பூசணி வெள்ளை பகுதியை நார்மல் துண்டுகளாக நறுக்கவும

*குக்கரில் ஊறிய பருப்பு, வெங்காயம், பூண்டு, தக்காளி, மஞ்சள்தூள், பச்சை மிளகாய் மற்றும் தர்பூசணி வெள்ளை பகுதி இவை அனைத்தும் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

*புளியை 1/4 கப் அளவில் கரைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் குக்கரை திறந்து சாம்பார் பொடி, உப்பு மற்றும் புளி கரைசல் அனைத்தும் சேர்க்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து பருப்பை ஊற்றி 15 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

*இந்த சாம்பாரின் சுவை தூக்கலாக இருக்கும்

Related Videos