காலிபிளவர் பட்டாணி மசால் தோசை| Cauliflower Peas Masala Dosa
தேவையான பொருட்கள்:
காலிபிளவர் - 1 நடுத்தரசைஸ்
ப்ரோசன் பட்டாணி - 1/2 கப்
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
தக்காளி - 2 விழுதாக அரைக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
காஷ்மிரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*காலிபிளவரை சிறிய பூக்களாக நறுக்கி உப்பு கலந்த நீரில் 10நிமிடம் வேகவைத்து நீரை வடிக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
*பின் தக்காளி விழுது, மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
*வேகவைத்த காலிபிளவர் மற்றும் பட்டாணி சேர்த்து நன்கு கெட்டியாக வரும்வரை கிளறி இறக்கவும்.
மசால் தோசை செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி/தோசை மாவு - 3 கப்
காலிபிளவர் பட்டாணி மசாலா - தேவைக்கு
எண்ணெய்/ நெய் - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*தோசைக்கல்லில் எண்ணெய் தடவி 1குழிக்கரண்டி மாவை விட்டு மெலிதாக வார்க்கவும்
*சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும்.தோசை 1பக்கம் வெந்தபிறகு மசாலாவை ஒருபக்கம் வைக்கவும்
*பின் அப்படியே மடித்து எடுத்து சட்னி,சாம்பாருடன் பரிமாறவும்
பின் குறிப்பு:
*தோசை ஒருபக்கம் வெந்த பிறகு திருப்பிபோடகூடாது.
*மாவு கொஞ்சம் தண்ணியாக இருந்தால் தோசை மெலிதாக சுட வரும்